பூட்டிய வீடுகளில் கொள்ளை - பாஜக நிர்வாகி கைது

 
tt

திருவள்ளூர், ஊத்துக்கோட்டையில் ஆளில்லாத வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி துணைத்தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

tt

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளை  நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் இரவில் புகுந்து கொள்ளையடித்ததாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவர் பிரபாகரன் மீது புகார் எழுந்தது.

arrest

 புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 51 லட்சம் மதிப்புள்ள 85 சவரன் உருக்கிய தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  பிரபாகரன் கொள்ளையடித்த பணத்தில் ஒரு கோடி மதிப்பில் தனது கிராமத்தில் சொகுசு வீடு ஒன்று கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  இதே போல கடந்த மாதம் பாஜக நிர்வாகி ஒருவர் வழிப்பறி செய்ததாக வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.