‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று தொடக்கம்

 
TNGOVT

அரசின் சேவைகளை விரைவாக பெறும் நோக்கில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று நடைமுறைக்கு வர உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர உயர் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் ஒரு நாள் முழுவதும் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

tn govt

காலை 9 மணி முதல் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கவும், முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

mk stalin
மாதத்தின் 4வது புதன்கிழமை மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நாள் முழுவதும் இருந்து பொதுமக்களின் குறைகளை கேட்க உள்ளார்.