'கூலி' படத்தின் லுக் டெஸ்ட் ஓவர்... படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

 
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின்கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அடுத்த மாதம் தொடங்குகிறது.

ரஜினியின் 'கூலி' படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படம்.. 'காலா' மாதிரியே  இருக்குதே..!

ஜெயிலரின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சன் பிக்சர்ஸ்- ரஜினிகாந்த் கூட்டணியில் ரஜினியின் 171வது திரைப்படமான 'கூலி' உருவாக உள்ளது.  தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து இதனை இயக்குகிறார். பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், படங்களைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.


இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின்  அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் இன்று ரஜினியின் லுக் டெஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெறும் கூலி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில்  படப்பிடிப்பில் இணையவுள்ளார்.