எப்படி எல்லாம் கடத்தல் செய்யுறாங்க பாருங்க... காபி தூள் பாக்கெட்டில்...

 
1 1

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகள் கொழும்புவில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது ஒரு பெண் பயணியின் உடைமைகளில் இருந்து 4.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த போதைப்பொருள் காபி தூள் பாக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளது. அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.4.7 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போதைப்பொருளை கடத்தி வந்த பெண், அவரிடம் இருந்து போதைப்பொருளை வாங்க விமான நிலையத்திற்கு வந்த நபர் மற்றும், இவர்களுக்கு உதவி செய்த 3 பேர் என மொத்தம் 5 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.