எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! காணாமல்போன கார் OLX இணையதளத்தில் விற்பனை..!

 
1

சென்னையை சேர்ந்தவர் ரபேல், இவர் கார் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ராணி என்பவர் Honda Civic காரை பழுது பார்க்க விட்டு சென்றதாகவும், தான் அந்த காரை அருகில் AA ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் யாரோ திருடிச் சென்றதாகவும், காரை கண்டுபிடித்து தருமாறும் வியாசர்பாடி குற்றப்பரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் பிரதீப்ராஜா என்பவர் தெருவில் நின்றிருந்த காரை படம் பிடித்து விற்பனை செய்யப்பட உள்ளதாக OLX இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்ததும், பழைய கார்களை வாங்கி விற்கும் அரவிந்த் என்பவர் எவ்வித ஆவணங்களும், சாவியும் இல்லாமல் மேற்படி காரை வாங்கி கொள்வதாக பிரதீப்ராஜாவிடம் கூறி ரூ.1.25 லட்சத்திற்கு விலைபேசி, காரை வாங்கி கொண்டு தனியாரிடமிருந்து ரெக்கர் வாகனத்தை வாடகைக்கு எடுத்து , ரெக்கர் வாகனம் மூலம் காரை தனது இடத்திற்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

அதன் பேரில், வியாசர்பாடி பகுதியில் மறைத்து வைத்திருந்த மேற்படி கார் மீட்கப்பட்டு , குற்றச் செயலுக்கு பயன்படுத்திய ரெக்கர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய நபரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அரவிந்த் , விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.