த்ரிஷா குறிந்த மன்சூர் அலிகான் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் கடும் கண்டனம்!

நடிகர் த்ரிஷாவை கற்பழிக்கவிடவில்லை என்ற மன்சூர் அலிகானின் கருத்துக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. விஜய், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் மன்சூர் அலிகான், “பட போஸ்டர்களில் ஹீரோ, ஹீரோயின்கள் புகைப்படங்களை மட்டுமே போடுகின்றனர். கற்பழிக்கவிடமாட்டிகிறாங்க... 150 படங்களில் நாம செய்யாத Rape ah.. ரோஜா, குஷ்புவை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி த்ரிஷாவை போடலாம் என நினைத்தேன். ஆனால் த்ரிஷாவை கண்ணுலயே காட்டல! தளபதி கூட ஹீரோயின்கள் டூயட் ஆட போறாங்க... நாங்க Illegal ஆக்டிவீட்டீஸ் பண்ணுவோம். ஹீரோ legal ஆக்டிவீட்டீஸ் பண்ணுவாங்க.. ஆகவே கதாநாயகர்களே வைரமுத்து ஐயாவின் கோரிக்கையை ஏற்று கதாநாயகிகளை காட்ட வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, “சமீபத்தில் திரு.மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாகபேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்புமிக்க பேச்சு. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற பரிதாபத்திற்குரிய ஒருவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ளாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் இது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Disheartened and enraged to hear the misogynistic comments made by Mr.Mansoor Ali Khan, given that we all worked in the same team. Respect for women, fellow artists and professionals should be a non-negotiable in any industry and I absolutely condemn this behaviour. https://t.co/PBlMzsoDZ3
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 18, 2023
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தனது பதிவில், நாங்கள் அனைவரும் ஒரே அணியில் பணியாற்றியதால், மன்சூர் அலி கான் கூறிய பெண் வெறுப்புக் கருத்துக்களைக் கேட்டு மனமுடைந்து கோபமடைந்தோம். பெண்கள், சக கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான மரியாதை எந்தத் துறையிலும் பேச்சுவார்த்தைக்குட்படாத ஒன்றாக இருக்க வேண்டும், இந்த நடத்தையை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.