மக்களவைத் தேர்தல் 2024 - விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

 
thiruma

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி , மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன.  குறிப்பாக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

election

கடந்த முறை போட்டியிட்ட விழுப்புரம், சிதம்பரம் தனித் தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் கையெழுத்தானது. 

thiruma

இந்நிலையில்  மக்களவைத் தேர்தல் 2024 - திமுக கூட்டணியில் விசிக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர் . சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.யும், விசிக தலைவருமான திருமாவளவன் , சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக போட்டியிடுகிறேன். I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் பானை சின்னத்தில்தான் போட்டியிட உள்ளோம்; பாஜகவை வீழ்த்துவதுதான் மக்களின் வேட்கையாக உள்ளது என்றார் .