வாக்கு கேட்கும் வாரிசுகள்... அனல் பறக்கும் தேர்தல் களம்!!

தமிழ்நாடு முழுவதும் வருகிற 19-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலானது ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், தீவிர வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது கட்சியை சார்ந்த வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#பதில்_சொல்லுங்க_மோடி @mkstalin@arivalayam@Udhaystalin@dmk_youthwing@dmksdwing@DMKITwing#DMK4ChennaiCentral #DMK4TN #VoteForDMK #LokSabhaElection2024 #IndiaElection2024 #MPElection2024 #SaveDemocracy pic.twitter.com/PuJVfVBSeq
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) April 2, 2024

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் மேட்டூர் அருகே மேச்சேரி, பொட்டனேரி கருமலை கூடல் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் . காய்கறி கடை , பூக்கடை , டீக்கடை என அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்களிடம் உரையாடி தனது அம்மாவிற்காக மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர்கள் அன்புடன் கேட்டுக் கொண்டனர்.
அதேபோல மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் தயாநிதிமாறன். கடந்த 2004 ,2009 ,2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர் இந்த முறையும் மத்திய சென்னையில் களம் காண்கிறார் . தயாநிதி மாறன் வீடு வீடாக சென்றும், வீதி வீதியாக வலம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தயாநிதி மாறன் உடன் புது முகமாக அவரது மகள் திவ்யா தயாநிதி தனது தந்தைக்கு ஆதரவாக பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.