“தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் திமுக ஆட்சி”- லோக் போல் கருத்துக்கணிப்பு

 
mkstalin

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும் என லோக் போல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

Image

திமுக கூட்டணி 181 முதல் 189 இடங்கள் வரை வெல்லும் என்றும் லோக் போல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 40.10 சதவீதம் வாக்குகளுடன் 189 இடங்கள் வரை திமுக வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 29% வாக்குகளுடன் 38 முதல் 42 இடங்களை அதிமுக கைப்பற்றும், தவெக 23.9% வாக்குகளுடன் 8 முதல் 10 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிமுகவை விட 11% க்கும் அதிகமான வாக்குகளை திமுக பெறும் என லோக் போல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.