தமிழகத்தில் ஜன.31வரை ஊரடங்கு நீட்டிப்பு- கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை

 
temple lockdown

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளொன்றிற்கு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

Anti-democratic': CM Stalin says Home Min Amit Shah refused to meet TN MPs  on NEET | The News Minute

அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் பிற்பகல் 11 மணியளவில் ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட கருத்துகளின்படி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஜனவரி 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 14 முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.