திருவண்ணாமலையில் நவ.19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

 
திருவண்ணாமலை தீபம்

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Karthika deepa Festival at Arunachaleshwarar Temple, Thiruvannamalai: The  Great Light will be lit tomorrow || திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீபத்திருவிழா: நாளை மகா ...

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா நாளான 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாளை உள்ளூர் விடுமுறையாக அனுபவிக்கும் மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களும் மேற்படி, அறிவிக்கப்பட உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.