வருகிற 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

 
local holiday

மே 10ம் தேதி  நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலம் என்பதால்  நீலகிரி மாவட்டத்துக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உதகையில் 126-வது மலர்க்காட்சி வரும் மே 10-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரையும்,  குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்காட்சி மே 24 முதல் மே 26 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 126வது மலர்க் கண்காட்சியை முன்னிட்டு மே 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு  ஈடாக மே 18-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று  மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.