திருவண்ணாமலைக்கு வரும் 24 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

 
திருவண்ணாமலை தீபம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் கடந்த 15- ஆம் தேதி 63 அடி உயர தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.  10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்த தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான  24 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், அதனை தொடர்ந்து மாலை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயர தீபமலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 40 லட்சம் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். 

இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி வரும் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் டிசம்பர் 5ஆம் தேதி வேலை நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.