வரும் 10ம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

 
1

தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் முக்கியமான கோவில் திருவிழாக்கள் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் இதற்கான அதிகாரம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ரசித்து பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்கள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில் வரும் மே பத்தாம் தேதி அன்று நடப்பாண்டுக்கான தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.இதனால் அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை காரணமாக அரசு கருவூலக அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும் என்றும், இதனை ஈடு செய்யும் வகையில் மற்றொரு பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.