விருதுநகர் மாவட்டத்திற்கு வரும் 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

 
விருதுநகர் மாவட்டத்தின் 166 கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு! விருதுநகர் மாவட்டத்தின் 166 கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு!

வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ttn

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் பிறந்த தினத்தில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும். பெரியாழ்வார், ஆண்டாள் என இரண்டு ஆழ்வார்கள் அவதரித்த பெருமைக்குரிய இத் திருத்தலத்தில் ஆடிப்பூ தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதற்காக கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழா வரும் 28ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.