மே 15ம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
Apr 28, 2025, 20:05 IST1745850958594
வருகிற மே 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் சிரசு ஊர்வல திருவிழா 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான வருகிற 15-ந் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை அன்று கருவூலங்களிலும், சார்நிலை கருவூலங்க ளிலும் அரசு பாது காப்புக்கான அவசர அலுவலக பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


