தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஜூன் 02ம் தேதி உள்ளூர் விடுமுறை!

 
local holiday

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2023 ஆம் ஆண்டில் வைகாசி விகாசம் ஆனது, வரும் ஜூன் 2 ஆம் நாள் காலை 05.55 மணிக்குத் தொடங்கி, ஜூன் 3 ஆம் நாள் காலை 05.54 வரை இந்த விசாகம் நட்சத்திரம் உள்ளது. வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 

இந்த நிலையில், ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற ஜூன் 2ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.