திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

 
tn

ஆழித்தேர் தமிழகத்திலுள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தேராகும். மிகவும் பெரியதாகவும் அழகாகவும் இருப்பதால் அதனைக் கொண்டு ”திருவாரூர் தேரழகு” என்ற சிறப்பைப் பெற்றது. ஆசியாவிலேயே இரண்டாவது உயரம் கொண்ட தேர் ஆகும்.

tn

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலுக்குரிய தேரான ஆழித்தேர் 1927இல் முற்றிலுமாகத் தீக்கிரையானது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியின் காரணமாக 1930இல் புதிய தேர் உருவாக்கம் பெற்று தேர்த் திருவிழா நடைபெற ஆரம்பித்தது. தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் உள்ளன. திருவாரூர் தேர் 96 அடி உயரம் 360 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு நிலைகளை உடையது.

tn

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேர் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 21ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் சாருஸ்ரீ  உத்தரவு பிறப்பித்துள்ளார். 11ம் வகுப்பு பொதுத்தேர்வு  வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.