நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை
பங்குனி உத்திர திருவிழாவிற்காக ஏப்ரல் ஒன்றாம் தேதி விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்காகவும், திருவிழா சிறப்பாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 1 ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சில அரசு தொடர்புடைய நிறுவனங்களுக்கு விடுமுறை இருக்கும்.
அதே நேரத்தில் அரசு பொதுத்தேர்வு மாணவர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 1ம் தேதி வழங்கப்படும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக ஏப்ரல் 11 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

