ஈரோட்டுக்கு ஏப்.8ல் உள்ளூர் விடுமுறை
ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப். 8ல் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரியம்மன், சருகுமாரியம்மன் ஊர்வலமாக சத்தியமங்கலம் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா ஏப்ரல் 8ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து பண்ணாரிஅம்மன் கோவிலில் குண்டம் இறங்குவதற்காக, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து பக்தர்கள் ஈரோடு வருவது வழக்கம்.
இதையடுத்து ஈரோடு பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப். 8ல் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் செவ்வாய்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.