தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
Jul 28, 2026, 20:00 IST1785249023156
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி (திங்கட்கிழமை) தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

