ஏப்ரல் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்?- முதல்வர் விஜய் ஆலோசனை

 
திமுக தூர சக்தி... அதிமுக தீர்ந்து போன சக்தி! திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க... நம்மையே- விஜய்

தமிழக உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலை வரும் ஏப்ரல் மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயில் சொத்துகள் மீட்பு - முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் கடைசியாக 1996, 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது. 2016-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தலுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், வழக்கு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தேர்தல் நடக்கவில்லை. அதன்பின் உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகள் வசம் சென்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளை பிரித்து கிராமப்புற தேர்தலை மட்டும் நடத்தினார். பின்னர் 2021-ல் திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தினார். இதனால் தான் இரண்டு தேர்தலும் இரண்டு வெவ்வேறு காலக்கட்டமாக மாறிப்போனது.

தற்போது தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து கிராம ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்து, சிறப்பு அதிகாரிகள் நிர்வாகம் நடந்து வருகிறது. நேற்றோடு அந்த 9 மாவட்டங்களின் பதவிக்காலமும் முடிந்துவிட்டதால், தமிழகத்தில் கிராம உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை. அதேபோல், மாநகராட்சி, நகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்தோடு முடிவடைகிறது. இந்த பின்னணியில் தான் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிகாரிகள் முதல்வர் விஜய்யிடம் விளக்கிய போது, "பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிக்காலம் முடிகிறது என்றால், எல்லாவற்றையும் சேர்த்து ஒரே கட்டமாக நடத்தினால் என்ன?" என்று முதல்வர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரிகள், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்த பிறகு ஏப்ரல் இறுதியில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.