விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு பங்கேற்காதது ஏன்?- எல். முருகன்

 
எல் முருகன்

பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது  பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டியில் 74 பேர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இம்முகாமினை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ரத்ததானம் செய்து துவக்கி வைத்தார்.

l murugan press meet

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், “விசிக- திமுக இடையிலான பிரச்சனை, வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காததால் அதிலிருந்து மக்களை திசை திருப்ப திருமாவளவனும் முதல்வரும் நாடகம் நிகழ்த்துகின்றனர். அந்த மாநாட்டில் ஏன் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, முதல்வரும் ஏன் கலந்து கொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்துக்கு பிறகு முதல்வர் அங்கு செல்லவில்லை. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாமே.
    
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது முதல் கோணல்  முற்றிலும் கோணல் என்பதையே காட்டுகிறது. எப்படி இவர் நடுநிலையாக இருப்பார்? கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்த நிலையிலும் பெட்ரோல், டீசல் விலை இதுவரை குறைக்கப்படவில்லை என பலரும் குறிப்பிடுகின்றனர், சர்வதேச அளவில் நடக்கும் போர் போன்ற காரணங்களால் பெட்ரோலியத் துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் சர்வதேச நிலையை கருத்தில் கொண்டே பெட்ரோல் டீசல் விலையை தீர்மானிப்பர்” என்றார்.