காஞ்சி காமாட்சி கோயிலில் எல்இடி மூலம் நேரலை - நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

 
tn

 அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நேரலை செய்யப்படுகிறது.

tn

ராமர் கோயில் திறப்பை கோயில்களில் நேரலை செய்வது தொடர்பாக விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, அவசர வழக்காக நீதிபதியின் அறையில் விசாரிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ,    "தமிழ்நாட்டில் ராமர் கோயில் திறப்பு நிகழ்வை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை . இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.  உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர்  அனுமதியளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.  

tn

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் நிகழ்ச்சி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் எல்இடி திரை மூலம் சிறப்பு நேரலை செய்யப்படுகிறது.  தனியார் கோயில்களில் ஒளிபரப்ப தடையில்லை என நீதிமன்றம் கூறியதையடுத்து நேரலை செய்யப்படுகிறது.  இந்நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். முன்னதாக அனுமதியின்றி எல்இடி திரைகள் போடப்பட்டதாக கூறி காமாட்சியம்மன் கோயிலில் காவல்துறை அவற்றை அகற்றியது குறிப்பிடத்தக்கது.