விழுப்புரத்தில் 4 நாட்கள் மதுக்கடைகள் மூட உத்தரவு

 
டாஸ்மாக்

விழுப்புரத்தில் 4 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பத்தாம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 64 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட 29 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 35 வேட்புமனுக்கல் தள்ளுபடி செய்யப்பட்டது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 8,9,10 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களும் மூடப்பட உள்ளன