தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை - 2 நாட்களில் ரூ.358 கோடி வசூல்!!

 
Tasmac

தமிழகத்தில் தை பொங்கல் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தாலும்,  மக்கள் வீடுகளிலேயே பொங்கல் சமைத்து பிரார்த்தனை செய்து பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

tasmac

இந்த சூழலில் நாளை திருவள்ளுவர் தினத்தை ஒட்டியும்,  வருகிற 18-ஆம் தேதி வள்ளலார் தினத்தை ஒட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் , பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவது போல,  மது பிரியர்கள் அவர்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tasmac

பல இடங்களில் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் ரூ.358 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நேற்று ரூ.203 கோடிக்கும், நேற்று முன்தினம் ரூ.153 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.