களைகட்டிய மதுவிற்பனை - நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடி வசூல்!!

 
tasmac

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tasmac

தமிழகத்தில் இன்று  மாட்டு பொங்கல் விழாவும், திருவள்ளுவர் தினமும்  கொண்டாடப்பட்டு வருகிறது.  பண்டிகை நாட்களில் மது விற்பனை என்பது வழக்கமாகவே களைகட்டும். இம்றையும் அதற்கு  விதிவிலக்கு அல்ல. அதேசமயம் திருவள்ளுவர் தினம் மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கையொட்டி 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்றே மது பிரியர்கள் மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள ஆர்வம் காட்டினர்.  இதனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.   மது வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் ,  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மது வாங்கி சென்றனர். 

Tasmac

இந்நிலையில்  பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக   மதுரையில் ரூ68.76 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல வாரியாக சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், திருச்சியில் ரூ.65.52 கோடிக்கும், சேலத்தில் ரூ63.87 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.