மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும்- மாநாட்டில் விசிக தீர்மானம்
மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என விசிகவின் ‘மது - போதைப் பொருள் ஒழிப்பு’ மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஈடுபட்ட வேண்டும், தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், குடி நோயாளிகளுக்கும், போதை அடி நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க டி-அடிக்ஷன் மையங்களை அரசு உருவாக்க வேண்டும், மது மற்றும் போதை அடி நோயாளிகளுக்கான மறு வாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என விசிகவின் ‘மது - போதைப் பொருள் ஒழிப்பு’ மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும், அரசமைப்பு சட்டம் 47ல் கூறியுள்ளபடி மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை ஒன்றிய அரசு இயற்ற வேண்டும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.