மது பிரியர்கள் ஷாக்..! இனி கடைகள் இயங்காது..!

 
tasmac

பணி நிரந்தரம், கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக., 28 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய டாஸ்மாக் பணியாளர்கள்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இப்போராட்டத்தில் 23,629 டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொள்வார்கள். சட்டசபை கூட்டத் தொடரிலேயே டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தரக் கோரி இப்போராட்டம் நடக்கிறது. இதனால் அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும்.

இந்நிலையில் 'டாஸ்மாக்' தொழிற் சங்கங்கள் சார்பில் நாளை முதல் நடக்க உள்ள கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு, ஈரோடில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் அளித்த பேட்டி: 

பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி, டாஸ்மாக் ஊழியர்கள் போராடுகின்றனர். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.