விஷச்சாராய விவகாரம்- அறிக்கை கேட்ட ஆளுநர்

 
rn ravi

விஷச்சாராய வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார். 

tn

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டு ,அதை பலர் வாங்கி குடித்துள்ளனர், இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் சாராய வேட்டை அதிரடியாக நடைபெற்றுவருகிறது. 


இந்நிலையில் தமிழ்நாட்டில் விஷச்சாராய உயிரிழப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் விஷச்சாராய வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எப்படி கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது? என விரிவான அறிக்கையாக விரைந்து தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி உத்தரவு பிறப்பித்துள்ளார்.