கள்ளச்சாராய உயிரிழப்பு 66 ஆக உயர்வு..!

 
1
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவ சேரி சேஷசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த ஜுன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தினர். இவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 65 பேர் உயிரிழந்தனர். 8 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தனர். இதில் சிவராமன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.