விஷச்சாராய மரணம் கொலை வழக்காக மாற்றம்

 
கள்ளச்சாராய மரணம்

விஷாச்சாராய மரணம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

BigBreaking | கள்ளச்சாராய மரணம் 21 ஆக உயர்வு! திமுக அமைச்சரை சுத்துப்போட்ட  சங்கரின் உறவினர்கள், பரபரப்பு! - Seithipunal

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார் குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்டு ,அதை பலர் வாங்கி குடித்துள்ளனர், இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராய வியாபாரிகளிடம் இருந்து 1,192 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாட்டின் 22 பேரின் மரணத்துக்கு காரணமான மெத்தனால் விற்பனை செய்த ஆலை அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா, ஏழுமலை மற்றும் 13 பேர் மீதான வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் மொத்தம் 11 மெத்தனால் தயார் செய்யும் தொழிற்சாலைகள், 71 மெத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடைய துணையோடு ஆய்வு செய்து கையிருப்பு மெத்தனாலை சரிபார்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.