வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மர்ம மரணம்! கொரோனா காரணமா?

 
lion

வண்டலூா் உயிரியல் பூங்காவில் கடந்த ஆண்டில் 12  சிங்கங்கள் இருந்தன. கொரோனா வைரஸ் 2 ஆம் அலை உச்சக்கட்டமாக இருந்தபோது, அதில் ஒரு சிங்கம் கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தது .இதையடுத்து மீதி உள்ள 11  சிங்கங்களையும் பத்திரமாக பாதுகாத்து வந்தனா்.,இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் மற்றொரு சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து சிங்கங்களின் எண்ணிக்கை 10  ஆக குறைத்தது.

Lion

இதற்கிடையே கடந்த 10 ஆம் தேதி வண்டலூா் உயிரியல் பூங்கா சூப்பிரண்டிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் தொடா்பில் இருந்த அலுவலா்களுக்கு கூடுவாஞ்சேரி நந்திவரம் அரசு மருத்துவமனை அதிகாரிகள் மருத்துவ பரிசோதணை நடத்தினா். அதில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து கடந்த 13 ஆம் தேதி,வண்டலூா் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் 315 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதில் 69 ஊழியா்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதையடுத்து வண்டலூா் உயிரியல் பூங்காவில் மொத்தம் 75 ஊழியா்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

இதனால் வண்டலூா் உயிரியல் பூங்காவை இம்மாதம் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த இளம் வயது விஷ்ணு என்ற ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்திருப்பது பூங்கா நிர்வாகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த 2 தினங்களாக மா்ம நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷ்ணுவை, மருத்துவர்கள் தனிமைப்படுத்தி வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனா்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அந்த சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை 9  ஆக குறைந்து விட்டது.