தேர்தல் பத்திரம் விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கு கடிதம் - பார் கவுன்சில் செயற்குழு கடும் கண்டனம்!!
Updated: Mar 13, 2024, 09:56 IST1710303982450
SBI-ன் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கடிதம் எழுதினார்.
தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது எனவும் வழக்கை மீண்டும் விசாரிக்க பரிந்துரைக்க வேண்டும் எனவும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா கடிதம் எழுதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குடியரசுத் தலைவருக்கு இத்தகைய கடிதம் எழுத பார் கவுன்சிலின் அனுமதியை ஆதிஷ் அகர்வாலா பெறவில்லை எனக்கூறி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அந்த அமைப்பின் செயற்குழு சார்பில் செயலாளர் ரோஹித் பாண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார்.