அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 262 பேர் கடிதம்!!

 
Udhayanidhi

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய போது சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . சிலவற்றை  ஒழிக்க வேண்டும்;  

Udhayanidhi stalin

எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார்.  ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி,  எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

Udhayanidhi

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதை சுட்டிக்காட்டி கடிதம்எழுதப்பட்டுள்ளது.