"கோயிலுக்குள் போன் எடுத்துட்டு போகலாம்... ஆனா இத மட்டும் செய்யக் கூடாது!"

 
1

தமிழக கோவில் களின் பாதுகாப்பு மற்றும் ஆன்மிக அமைதியை காக்க, முதல் கட்டமாக, பக்தர்கள் அதிகளவில் கூடும், 52 முதுநிலை கோவில்களுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல, கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது.

பக்தர்கள் 5 ரூபாய் செலுத்தி, மொபைல் போன்களை பாதுகாக்கும் வகையில், வைப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களை ஒப்படைக்கவும், மீண்டும் பெறவும், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரம் மிகப்பெரும் விவாதத்திற்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, அறநிலையத்துறை தனது முடிவை மாற்றிக் கொண்டது. தற்போது, ‘மொபைல் போன்களை, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்து, பக்தர்கள் கோவிலுக்குள் எடுத்து செல்லலாம். ஆனால், போட்டோ, வீடியோ எதுவும் எடுக்கக் கூடாது, மீறினால் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படும்’ என, எச்சரித்து பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.