"வீடியோவை நெட்டில் போடுவோம்!" – போதை கொடுத்து சீரழிக்கப்பட்ட இளம்பெண்; கேரளாவில் சிக்கிய 4 கொடூரன்கள்!
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் மனிதநேயமற்ற முறையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் அம்மாநிலத்தையே உறைய வைத்துள்ளது. தன் சொந்த உறவினரே எதிரியாக மாறி, ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அவரது சொந்த உறவினர் உட்பட சிலர் சேர்ந்து ரகசியமாக பல்வேறு தங்கும் விடுதிகள் மற்றும் தனி வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மது மற்றும் வீரியமிக்க போதைப் பொருட்களைக் கொடுத்து, சுயநினைவை இழக்கச் செய்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இத்துடன் நிறுத்தாமல், இந்த அசிங்கமான செயல்களை தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் படம்பிடித்து வைத்துக் கொண்ட அந்த கும்பல், "வெளியில் சொன்னால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம்" என மிரட்டியுள்ளது. இந்த பயத்திலேயே அந்த இளம்பெண் பல நாட்களாக நரக வேதனையை அனுபவித்து, யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதி காத்துள்ளார்.
ஆனால், போகப்போக அக்கும்பலின் அத்துமீறல்கள் எல்லை மீறவே, வேறு வழியின்றி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அப்பெண் பெரம்பரை காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார்.
தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக வெள்ளியூர் வலியபரம்பை ஜாசிப் (வயது 39), கருவண்ணூர் சம்போலி ஜாகீர் உசேன் (49), நடுவண்ணூர் கலம்குளத் ராஜீஷ் (40), நடுவண்ணூர் தானிப்பட்டை அபிலாஷ் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களுள் ராஜீஷ் என்பவன் மீது ஏற்கனவே பல தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவன் 'கப்பா' (KAAPA) சட்டத்தின் கீழ் ஊரை விட்டே நாடு கடத்தப்பட்ட குற்றவாளி என்பதும், பெற்ற தந்தையை அடித்து விலா எலும்புகளை உடைத்த கொடூர பின்புலம் கொண்டவன் என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த வழக்கில் இன்னும் பல முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுவதால், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

