"பணி முடிப்போம், வெற்றி வாகை சூடுவோம்!" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

 
stalin

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படும் நிலையில்  அரசியல் கட்சிகள்தேர்தல் பணிகளில் ஆயத்தம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு ஆகிய குழுக்களை அமைத்து திமுக தலைமை அறிவித்துள்ளது.

arivalayam

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார் . அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி , அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.அதேபோல்  தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க  திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தொடங்கியது #Election2024 பணி!

பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்!

#INDIA வெல்லும்! என்று குறிப்பிட்டுள்ளார்.