வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

"ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காக்க முடியாது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 

mk stalin

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா என்ற தலைப்பில் ஆடியோ சீரியஸ் மூலம் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

அந்த ஆடியோ உரையில் பேசியுள்ள அவர்,  இந்தியாவுக்காக எல்லோரும்  பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து,  இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே பாஜக சிதைக்க முயற்சிக்கிறது , குஜராத் மாடல் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் இப்போது என்ன மாடல் என தெரியாமலேயே முடியப்போகிறது.  ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் , இந்தியாவை யாராலும் காக்க முடியாது.  ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது ஒரு சிலரின் நலனாக சுருங்கி விட்டது என்று கூறியுள்ளார்.


அத்துடன் , வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் தருவோம் ; ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரப்படும்;  உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம் ; நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள்;  இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும்.  பாஜக ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பின் மறந்தும் கூட குஜராத் மாடல் குறித்து பேசுவதில்லை என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் .