மகிழ்ச்சியை வாரி வழங்கும் மழலைகளை இன்றும், என்றும் போற்றுவோம்!

 
pmk

தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி அன்புமணி ராமதாஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

tn

இந்தியாவில் குழந்தைகள் நாள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால் குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அழைத்தனர். எனவே அவரது நினைவாகவும் அவரது விருப்பத்தின் பேரிலும் அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.உலகின் பல்வேறு அமைப்புக்களும் நாடுகளும் வெவ்வேறு நாட்களில் குழந்தைகள் நாளை கொண்டாடுகின்றன.


இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தளபக்கத்தில் , குழந்தைகளை எல்லையில்லாமல் நேசித்த  ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது. மடியிலிருந்து கறந்த பாலுக்கு இணையான தூய்மையான உள்ளங்களுக்கு  சொந்தக்காரர்கள் குழந்தைகள்.  குழந்தைகளைக் கொஞ்சும்போது நமது கவலைகளை மறக்கச் செய்து, நம்மையும் குழந்தைகளாகவே மாற்றி விடுவது தான் அவர்களின் சிறப்பு. உண்மை தான்.... அதனால் நானே இப்போது அடிக்கடி குழந்தையாக மாறி விடுகிறேன். மகிழ்ச்சியை வாரி வழங்கும் குழந்தைகளை இன்றும், என்றும் போற்றுவோம்!என்று குறிப்பிட்டுள்ளார்.