"உழவுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்" - மத்திய அமைச்சர் எல்.முருகன் மாட்டுப் பொங்கல் வாழ்த்து!
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம்.
உழவுக்கு உறுதுணையாய் விவசாயப் பெருமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் திகழ்கின்ற மாடுகளுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
அவ்வகையில், இன்று தங்களது மாடுகளுடனும் மற்ற விலங்கினங்களுடனும் இத்தினத்தைக் கொண்டாடும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும் “மாட்டுப் பொங்கல்” தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம்.
— Dr.L.Murugan (@DrLMurugan) January 16, 2026
உழவுக்கு உறுதுணையாய் விவசாயப் பெருமக்களின் வாழ்வில் ஒரு அங்கமாய் திகழ்கின்ற மாடுகளுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் இந்த தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.… pic.twitter.com/xXnBZUfDO0


