தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்! - மு.க.ஸ்டாலின்..!!
தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து முதலமைச்சர் தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு ஆடை அணிந்து கருப்புக்கொடி ஏற்றினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
* அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
* இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
* இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
* "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி மறு வரையறை நகலை எரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்டம் !#MKStalin #Delimitation #DMK pic.twitter.com/qXctcIEjj3
— Top Tamil News (@toptamilnews) April 16, 2026