சிறுத்தை நடமாட்டம் - பள்ளிக்கு விடுமுறை

 
tn

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்றிரவு 11 மணியளவில் சிறுத்தை ஒன்று நடமாடியுள்ளது . சாலையில் சிறுத்தை ஒன்றை சுமார் 10 நாய்கள் துரத்தி வந்துள்ளது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது தொடர்பான செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.  இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் நடத்திய சோதனையில் சிறுத்தையின் கால் தடம் உள்ளதை கண்டறிந்தனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பன்றியை  சிறுத்தை கடித்த இடத்தில் வனத்துறையினர் ஆய்வு

இதன் காரணமாக செம்மங்கரை அருகில் உள்ள பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர வேட்டையை தொடங்கியுள்ளனர். அத்துடன் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.