கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வீட்டில் வழக்கறிஞர் ஆலோசனை
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், வழக்கறிஞர் குணதீபனுடன் ஆலோசனை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளதாக சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட விசாரணை முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறப்படும் நிலையில், கட்சித் தலைமை அடுத்து என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அருள் விக்னேஷ் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமா, விளக்கம் கேட்கலாமா என்பது குறித்து தலைமை தரப்பில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கிய நிர்வாகிகள் இது குறித்து தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், வழக்கறிஞர் குணதீபனுடன் ஆலோசனை நடத்தினார். நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வழக்கறிஞர் செய்தியாளர்களின் மற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

