கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி தந்த லீமா ரோஸ்

 
கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி தந்த லீமா ரோஸ்

கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ்.


திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு  லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் வெற்றி பெற்றார். அதிமுகவில் சமீபத்தில் சேர்ந்த மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்க்கு,  139 கோடி ரூபாய் மதிப்புக்கு நகை உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 909 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் உள்ளன. தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின், கட்சியினருக்கு கார் பரிசு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ்.அவரது வெற்றிக்காக உழைத்த அதிமுகவைச் சேர்ந்த வட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் காரை பரிசாக வழங்கியுள்ளார். இதனால் அதிமுக வட்ட செயலாளர்கள்  இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.