லீவு விட்டாச்சு..! வெளியானது தமிழக பள்ளிகள் திறப்பு தேதி..!

 
1 1

2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற்ற நிலையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியும் கோடை விடுமுறை துவங்குகிறது.

இந்நிலையில், மாணவர்களின் ஆவலோடு காத்திருந்த பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதி (02.06.2025), திங்கட்கிழமை அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

முன்னதாக, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதியுடன் பள்ளி இறுதித் தேர்வுகள் முடிவடைய உள்ளன. ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட ஏதுவாக, ஆசிரியர்களுக்கான கடைசி வேலை நாள் ஏப்ரல் 30, 2026 ஆகும்.

எனவே, அனைத்து தலைமை ஆசிரியர்களும் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.