வருமான வரித்துறை சோதனை குறித்து முன்கூட்டியே தகவல் கசிவு? - அதிகாரிகள் அதிர்ச்சி

 
raid

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், சோதனை நடைபெறவுள்ள தகவல் நேற்றே வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் ஏ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சோதனை நடைபெறவுள்ள தகவல் நேற்றே வெளியானதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமான வரி சோதனை குறித்த தகவல் வெளியானது எப்படி? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 வெவ்வேறு வழக்குகளில் அதிக இடங்களில் சோதனை மேற்கொள்ள ஐ.டி. அதிகாரிகள் சென்னையில் வந்து தங்கி இருந்தனர். தமிழக அமைச்சர் ஒருவர் வீட்டில் சோதனை நடைபெறும் முன்பே சோதனை குறித்த தகவல் வெளியாகி இருந்தது எப்படி என விசாரணை நடத்தி வருகின்றர்.