‘ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற வேண்டும்’ - தலைவர்கள் வாழ்த்து..!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் விரைவில் உடல்நலன் பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ”
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.@AIADMKOfficial
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 1, 2024
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை : “மதிப்புக்குரிய சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். உலக அளவில் பொதுமக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள், விரைந்து நலம் பெற்று, தனது கலைப் பணிகள் தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.”
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : “உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக முழு நலமடைந்து இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: “உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் திரு ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர். திரு ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்.”
உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன்.
— Selvaperunthagai K (@SPK_TNCC) October 1, 2024
எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் திரு ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர்.
திரு ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம்…
உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என விரும்புகிறேன்.
— Selvaperunthagai K (@SPK_TNCC) October 1, 2024
எனக்குத் தெரிந்த வலிமையான நபர்களில் திரு ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். எவ்வளவு கடினமான நேரத்திலும் உறுதியாக இருந்து போராடுபவர்.
திரு ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் இல்லம்…
நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் : “பெரும்புகழ் பெற்ற திரைக்கலைஞர் எங்கள் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டுவர என்னுடைய பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.”
தமாக தலைவர் ஜி.கே.வாசன் : “மரியாதைக்குரிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.”
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் : “உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”