ரம்ஜான் பண்டிகை - ஜி.கே.வாசன், செல்வப்பெருந்தகை, சீமான் வாழ்த்து!

 
Seeman

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள பதிவில், இனிய #ரமலான் தின நல் வாழ்த்துக்கள். உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக இன்நோம்பை அனுசரிக்கிறார்கள். உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கும் இந்நோம்பின் இறுதிநாளை அனைவரும் ரமலான் நாளாக கொண்டாகிறார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் இப்புனித ரமலான் நன்னாளில் இறைவனின் கருணையும், நல்லாசியும், அனைத்து செல்வங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பதிவில், ரம்ஜான் பெருநாளில் அனைவருக்கும் கொடை வழங்கி, அவர்களுடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புனித ரமலான் மாதத்தில் இறை சிந்தனையோடு, உடல் வருத்தத்தையும் பொருட்படுத்தாது உலக நலனை வேண்டி, நபிகள் பெருமானார் காட்டிய நெறிவழி தவறாது உண்ணா நோன்பினை வாழ்வின் முக்கியக் கடமையாக ஏற்றுக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.