வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை – வழக்கறிஞர்கள் முக்கிய கோரிக்கை..!

 
1

தனியார் வாகனங்களில் காவல், பிரஸ், நீதித்துறை, வழக்கறிஞர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டும் பழக்கம் பெரும்பாலானவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறையானது தனியார் வாகனங்களில் இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. போக்குவரத்து காவல்துறையின் இந்த அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கையை வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் அறிக்கையாக தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் காவல்துறையின் அறிவிப்பில் வெளியிடப்பட்டதாவது சட்டப்பிரிவு குறைபாடான நம்பர் பிளேட் தொடர்புடையது என்றும், அது ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது என்றும், இந்த விதியிலிருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.